Wednesday, April 4, 2018

கிராம ஊராட்சி



கிராம ஊராட்சி


#gkintamil #generalknowledge  #tamilnadu #india

கிராம ஊராட்சி

உள்ளாட்சி நிர்வாகம் யாரால் ஏற்படுத்தப்பட்டது 
ஆங்கிலேய ஆட்சியாளர் "ரிப்பன் பிரபு" அவர்களால்.


  • கிராமங்களில் செயல்படும் உள்ளாட்சி கிராம ஊராட்சி ஆகும்.
  • இதன் தலைவர், பகுதி( வார்டு ) உறுப்பினர்கள் மற்றும் மன்ற உறுப்பினர்கள்( கவுன்சிலர்கள் ) மக்களால் தேர்தெடுக்கப்படுவார்கள்.
  • இவர்களது பதவிக்காலம் 5 ஆண்டுகள்.


ஊராட்சி மன்றத்தின் மூலம் நிறைவேற்றப்படும் வேலைகள்


  • தெருவிளக்கு அமைத்தல்
  • ஊர்சாலைகள் அமைத்தல்
  • குடிநீர் வழங்குதல்
  • கழிவு நீர்க் கால்வாய் அமைத்தல்.
  • சிறிய பாலங்கள் கட்டுதல் 


வருவாய்

கிராம ஊராட்சி அல்லது ஊராட்சி மன்றத்திற்கு எதன் மூலம் வருவாய் கிடைகிறது


  • வீட்டு வரி, தொழில் வரி.
  • கடைகள் மிது விதிக்கப்படும் வரி
  • குடிநீர் குழாய் இணைப்பு கட்டணம்.
  • நில வரியில் குறிபிட்ட பங்கு.
  • சொத்துரிமை மாற்றத்தின் மீதான வரியிலிருந்து ஒரு பங்கு.
  • மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்ட நிதிகளையும், மானியங்களையும், உதவித் தொகைகளையும் ஊரக வளர்ச்சி முகைமை முலமாக ஊராட்சிகளுக்கு வழங்குகிறது.

ஊர் மன்றக் கூட்டம்

  • ஒவ்வொரு கிராமத்திலும்  ஊர் மன்றக் கூட்டம்(கிராம சபை ) அமைக்கப்பட்டுள்ளது. 
  • ஊராட்சிக் எல்லைக்குட்பட்ட மக்கள் அனைவரும் அதன் உறுப்பினர்கள்.
  • கிராமத்தின் வளர்ச்சிக்குரிய திட்டங்கள், ஆண்டு வரவு செலவு, திட்டங்களின் பயனாளிகள் யார்? என்பது போன்ற அனைத்தும் ஊர் மன்ற கூட்டத்தில் ஒப்புதல் பெற்ற பின்புதான் நடைமுறைபடுத்தப்படும்

ஊர் மன்றக் கூட்டங்கள் ஆண்டிற்கு நான்கு முறை கூடுகின்றன.


  • ஜனவரி 26  குடியரசு தினம்
  • மே 1 - உழைப்பாளர் தினம்
  • அகஸ்ட் 15 - குடியரசு தினம்
  • அக்டோபர் 2 : காந்தி ஜெயந்தி 
https://www.generalknowledgeintamil.com/2018/04/blog-post_68.html
https://www.generalknowledgeintamil.com/2018/04/blog-post_4.html
https://www.generalknowledgeintamil.com/2018/04/blog-post_56.html
https://www.generalknowledgeintamil.com/2018/04/blog-post.html

மாவட்ட ஊராட்சி

# gkintamil   # generalknowledge      # tamilnadu   # india மாவட்ட ஊராட்சி   ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மாவட்ட ஊராட்சி  அமைக்கப்பட்...