Tuesday, March 20, 2018

சோழர்கள்

#சோழன் #gkintamil #generalknowledge #cholas #emperor #india#சோழர்கள்

சோழர்கள்


  • கி.மு.மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி.மூன்றாம் நூற்றாண்டு வரை கடைச்சங்க காலத்தில் வாழ்ந்த சில சோழ மன்னர்கள் பற்றிய குறிப்புகள் சங்கத்தமிழ் நூல்களில் கிடைக்கின்றன. 
  • அவர்கள் பற்றிய தெளிவான போதிய தொல்லியல் சான்றுகள் இல்லை. 
  • சங்க காலத்தில் வாழ்ந்த கரிகாற்சோழன், கிள்ளிவளவன் போன்ற சோழ அரசர்கள் முற்காலச்சோழர் அவர்கள்.
  • சங்கம் காலத்திற்கு பின்பு, பல்லவர் ஆட்சிக்கும் பின்பு கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் மீண்டும் சோழராட்சி மலர்ந்தது. இக்காலத்தில் சோழர்கள் வலிமை குன்றிய குறுநில மன்னர்களாக வாழ்ந்தனர்.
  • ஒன்பதாம் நூற்றாண்டு முதல் மீண்டும் வலிமை பெற்றறனர் சோழ அரசர்கள். இவர்கள் பிற்காலச் சோழர்கள். 
  • சங்ககாலம் முதல் சோழர்கள் ஆட்சி புரிந்தாலும்,  கி.பி.950 முதல் 1279 வரை திகழ்ந்த சோழராட்சிக்காலமே பிற்காலச்சோழர் காலம் எனக் கொள்ளப்பெறுகின்றது. 
  • கரிகாற்சோழனின் வழிவந்த சோழ மன்னரின் ஒரு பிரிவினர் ஆந்திர மாநிலத்துக் கர்நூல், கடப்பை ஆகிய பகுதிகளில் ஆட்சி புரிந்து வந்தனர்,  ஆந்திர நாட்டுக் கல்வெட்டுகள் இவர்களை தெலுங்குச் சோழர்கள் என்றும், கரிகாற்சோழன் வழிவந்த சோழர்கள் என்றும் கூறுகிறது.


வரலாற்று மூலங்கள்


  • அசோக சக்ரவர்த்தியின் கல்வெட்டுகள்.
  • திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் அகிய நாயன்மார்களின்  பாடல்கள்,
  • மூன்றாம் நந்திவர்மபல்லவன் காலத்தில் எழுதப்பட்ட நந்திக்கலம்பகம் எனும் நூல். 
  • வேலூர்ப்பாளையச் செப்பேடுகள். 
  • சின்னமனூர்ச் செப்பேடுகள். 
  • பெரியபுராணமும்.
  • ஹியூன் த்சாங் எனும் சீனநாட்டுப் பயண எழுத்தாளரின் குறிப்புகள்.
  • கலிங்கத்துப்பரணி, தக்கயாகப்பரணி, மூவருலா, மற்றும் சங்கரசோழனுலா நூல்கள்.
  • திருவாலங்காடு, கரந்தை, லெய்டன் முதலிய செப்பேட்டுச் சாசனங்கள்.
     


மாவட்ட ஊராட்சி

# gkintamil   # generalknowledge      # tamilnadu   # india மாவட்ட ஊராட்சி   ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மாவட்ட ஊராட்சி  அமைக்கப்பட்...