Wednesday, April 23, 2014

பொது அறிவு - இமயமலை

இமயமலை 


இமயமலை எந்த வகையான மலைக்கு உதாரணமாக உள்ளது?
  • மடிப்பு மலை 

இமயமலையின் உட்பிரிவுகள் என்ன?
  • மேற்க்கு இமயமலைகள் 
  • மத்திய இமயமலைகள்
  • கிழக்கு இமயமலைகள்

மேற்க்கு இமயமலைகள் 
  • தென் மேற்க்கு காஷ்மீரில் அமைந்துள்ளது.
  • ஆப்கானிஸ்தானுக்கும், சீனாவுக்கும் இடையில் இந்தியாவின் எல்லைகளாக உள்ளது.
  • உலகின் இரண்டாவது உயரமான சிகரமான k2 எனப்படும் காட்வின் ஆஸ்டின் இம்மலைத்தொடரில் உள்ளது.
மத்திய இமயமலைகள்
  • வடக்கு தெற்காக மூன்று மலைத்தொடர்கள் அமைந்துள்ளது.
    1. ஹிமாத்திரி
    2. ஹிமாச்சல்
    3. சிவாலிக்
ஹிமாத்திரி
    • உலகின் மிக உயர்ந்த எவரஸ்ட் இங்குள்ளது.(எவரஸ்ட்உயரம்)
    • இங்குள்ள பிற சிகரங்கள் கஞ்சன்ஜங்கா(8598 மீ), நங்கபர்வத்(8126 மீ)தவளகிரி( 8167 மீ )நந்திதேவி( 7818 மீ)
    • கங்கை மற்றும் யமுனை உற்பத்தியாகும் பனியாறுகள் கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி இங்குதான் அமைந்துள்ளன.
ஹிமாச்சல்

    • இப்பகுதியில் உள்ள நீண்ட மலைத்தொடர் பீர்பாஞ்சால்.
    • பாகல்கம், குல்மார்க், முசௌரி மற்றும் நைனிடால் மலை வாழிடங்கள் இங்குதான் உள்ளது.
    • அமர்நாத், கேதார்நாத், பத்ரிநாத் மற்றும் வைஷ்ணவதேவி கோயில்களும் இங்குதான் உள்ளது.
சிவாலிக்
    • குறுகலான, நீண்ட டூன் எனப்படும் பள்ளத்தாக்குகள் இங்கு காணப்படுகின்றன.
    • தராய் சமவெளிகள் சிவாலிகின் தென் பகுதியில் காணப்படுகின்றன.

கிழக்கு இமயமலைகள்
  • கிழக்கு எல்லைகளாக உள்ள இந்த மலைகளை பூர்வாச்சல் என அழைக்கப்படுகிறது.
  • வடக்கில் படகாய் மற்றும் நாகா குன்றுகளும், தெற்கில் மீசோ குன்றுகளும் இந்த மலையில் அடங்கியுள்ளன.
தொடர்பான பதிவுகள் : http://www.generalknowledgeintamil.com/2014/04/blog-post_17.html
Evernote helps you remember everything and get organized effortlessly. Download Evernote.